Wednesday, 21 August 2013

குரூப்-4 தேர்வுக்கு ,இரண்டாவது கட்டமாக "ஹால் டிக்கெட்' வெளியீடு



            குரூப்-4 தேர்வுக்கு, "ஹால் டிக்கெட்பெறாதவர்களுக்குஅவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில்நேற்று, "ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டது. வரும், 25ம் தேதிகுரூப்-4 தேர்வு நடக்கிறது. இதை, 14 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
இவர்களுக்கான, "ஹால் டிக்கெட்'கள்கடந்த, 14ம் தேதி, www.tnpsc.gov.in என்ற,தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. தேர்வுக்குமுறையாக விண்ணப்பித்துதேர்வுக் கட்டணம் செலுத்தியும், "ஹால் டிக்கெட்கிடைக்காதவர்கள்தேர்வுக் கட்டணம் செலுத்தியதற்கான படிவத்தை, 19ம் தேதிக்குள்,தேர்வாணைய, "-மெயிலுக்குஅனுப்பும்படிதேர்வாணையம் கேட்டுக் கொண்டிருந்தது. அதன்படி, 19ம் தேதி வரை விண்ணப்பித்த தேர்வர்களுக்குதேர்வாணைய இணையதளத்தில்,நேற்று, "ஹால் டிக்கெட்'கள் வெளியிடப்பட்டன. "-மெயில்'அனுப்பியும், "ஹால் டிக்கெட்கிடைக்காத தேர்வர்கள் இருந்தால்,அவர்கள்உரிய ஆவணங்களுடன்சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும்தேர்வாணைய அலுவலரை, 23, 24 தேதிகளில் அணுகலாம் எனடி.என்.பி.எஸ்.சி.தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனாதெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment