Wednesday, 14 August 2013

ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத தயாராவோர்.............

ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத தயாராவோர்பதட்டம் இல்லாமல் படித்து தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இனிபுதிய பாடங்களை படித்தல் கூடாது. ஏற்கனவே படித்துள்ளவற்றையே திருப்புதல் செய்ய வேண்டும்.
தமிழில் நூலாசிரியர்கள்தமிழ் எண்கள்பா வகை
யாப்புவில் தளைஅணிஆகுபெயர்களை படிக்க வேண்டும்.
குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தலில்கோட்பாடுகளை கூறியவர்கள்பயன்பாடுதோன்றிய ஆண்டுஉளவியலில் பல்வேறு பிரிவுகளை தெரிந்து கொள்வது அவசியம்.
ஆங்கிலத்தில் சுருக்கு வடிவத்தின் விரிவாக்கம்ஆங்கிலச் சொல்லுக்கு இணையானஎதிர்மறை சொற்கள்பறவை,விலங்குகளின் ஒலிகள்அவற்றின் பாலினங்கள்அவற்றின் கூட்டப் பெயர்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
கணக்கில்எண்ணியல்பரப்பளவுகனஅளவுதனிவட்டி,கூட்டுவட்டிசராசரிபுள்ளியியல் பாடங்களில் முக்கிய சூத்திரங்கள் தெரிவது அவசியம்.
இயற்பியலில் அலகுகள்விதிகள்பயன்கள் தெரிந்து இருக்க வேண்டும். வேதியியலில் தனிமங்களின் குறியீடுகள்,சேர்மங்களின் பயன்கள்,  வேதிப்பெயர்கள்அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வேதிச் சேர்மங்களை படிக்க வேண்டும்.
தாவரவியலில் செல்கள்வைரஸ்பாக்டீரியா போன்ற பகுதிகளை நினைவுபடுத்தவும்.
உலக புவியியலில் கோள்களின் சிறப்பம்சங்கள்இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள்உலகில் நடைபெற்ற முக்கிய பேரழிவுகள்நடந்த ஆண்டுஇந்திய மலைகள்காடுகள் தொடர்புடைய பகுதிகளை அறிந்திருக்க வேண்டும்.
மனித உடலியல் பகுதியில் நோய்கள்வைட்டமின்கள்,ரத்தசெல்கள் பற்றி அறிய வேண்டும்.
வரலாறு பகுதியில் முக்கிய போர்கள்நடந்த ஆண்டுசுதந்திர போராட்ட காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்நூல்,நூலாசிரியர்கள்இயக்கங்களை தோற்றுவித்தவர்கள்.
அரசியல் அமைப்பின் முக்கிய ஷரத்துகள் (குறிப்பாக குழந்தை கல்வி தொடர்பானவை)அட்டவணைகள்சட்ட திருத்தங்கள் அறியவேண்டும்.
சூழ்நிலையியல் பாடத்தில் சுற்றுச்சூழல் தொடர்புடைய மாநாடுகள்தினங்கள்சட்டங்கள்கல்வி தொடர்புடைய தினங்கள்,தேசிய நினைவுச் சின்னங்களை நினைவுபடுத்த வேண்டும்.
விண்வெளி தொடர்புடைய நிகழ்வுகள்ஆண்டுகள்மையங்கள்,ஊராட்சி நிர்வாகம்தமிழக வரலாறு தொடர்புள்ள நிகழ்வுகளை அறிந்திருப்பது அவசியம்.
                          கடந்த ஆண்டு நடந்த தேர்வுகளில்பல கேள்விகளுக்கு பதில் தெரிந்து இருந்தும்நேர மேலாண்மை தெரியாததால் பலர் தோல்வி அடைந்தனர். எனவேவீட்டிலேயே மாதிரி தேர்வுகளை எழுதிப் பழகலாம்.  150 வினாக்களில்முதலில் நன்கு தெளிவாக தெரிந்த விடைகளை எழுதியபின்மற்ற வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இத்தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் பிடித்தம் கிடையாது. எனவேஎல்லா வினாக்களுக்கும் விடையளித்துவிடவும்.

                                    தேர்வுக்கு முன்தினம்நன்கு தூங்க வேண்டும். தேர்வு நாளில் ஹால்டிக்கெட்பால்பாயின்ட் பேனாவை முதலிலேயே எடுத்து வைத்துகடைசி நேர பதற்றத்தை தவிர்க்க வேண்டும். நேரமேலாண்மைக்கு கடிகாரம் அணிந்து செல்வது நல்லது. தேர்வு மையத்தை முன்தினமே அறிந்து வைத்திருப்பது நல்லது. எல்லாவற்றையும்விட, "என்னால் வெல்ல முடியும்என்ற நம்பிக்கை இருப்பது அவசியம். இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment