Friday, 2 August 2013

இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் உயர்த்த கோரிக்கை



           தர ஊதியம் ரூ.4200ஆக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி அவிநாசி வட்டார பொதுக்குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த
கூட்டத்திற்கு, வட்டாரத்தலைவர் வெள்ளியங்கிரி தலைமை தாங்கினார். மாநிலத்தலைவர் கு.சி.மணி, முன்னாள் மாநிலத்தலைவர்  செ.சுப்பிரமணியம், வட்டாரச்செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 6வது ஊதியக்குழுவில் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளைக் களைய தமிழக அரசால் நியமிக்கப்பட்ட 3 நபர் குழுவில் பரிந்துரைகளை கடந்த  25ம் தேதி தமிழக  அரசு வெளியிட்டது.  அதில், இடைநிலை ஆசிரியர்களின் தர ஊதியம் ரூ.4200ஆக உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இது தொடர்பான எந்த அரசானையையும்  வெளியிடாமல் இருப்பது, இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏமாற்றத்தை தருகிறதுஇதனால், அடுத்த கட்ட நடவடிக்கையாக, ஆகஸ்ட் 4-ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெறும் மாநிலப்பொதுக்குழுவில் இதற்கான அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைகள் எடுப்பது, என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment