''இலவசங்களும் சன்மானங்களும் வழங்கும் வியாதி எல்லா நாடுகளிலும் உண்டா?''
''சீனாவில் அரசன் ஒருவன் தன் உயிர் காக்க உதவிய ஊழியன் ஒருவனைப் பாராட்டி சன்மானம் வழங்க எண்ணினான். ஆனால், அரசனின் கஷ்ட காலத்தில் கூடவே இருந்த அவனோ, அரசன் நல்ல நிலைக்கு வந்தவுடன் விலகிச் சென்றுவிட்டான். எப்படியாவது அவனைத் தேடிக் கண்டுபிடித்து சன்மானத்தை வழங்க முடிவு செய்த அரசன்

ஆட்களை வைத்து அவனைத் தேடினான். ஆனால்,
நாடெங்கும் தேடியும் அந்த ஊழியன் கிடைக்கவில்லை. எவரும் நுழைய முடியாத காட்டுப் பகுதி ஒன்றில் தன் தாயுடன் அவன் ஒளிந்திருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, அவனை வெளியே வரவைக்கத் திட்டமிட்ட அரசன், காட்டுக்குத் தீ வைக்க உத்தரவிட்டான். காடு முழுக்க எரிந்து பொசுங்கும்வரை யாரும் வெளிவரவில்லை. ஆனால், தீ முற்றிலும் அணைந்த பிறகு காட்டுக்குள் இரண்டு சடலங்களைக் கண்டெடுத்தனர். கை நீட்டி இலவசம் பெறக் கூசிய தாயும் மகனும் தப்பிக்க முற்படாமல் நெருப்புக்குத் தங்களை இரையாக்கிக்கொண்டார்கள். கலங்கிப்போன அரசன், அந்த ஊழியனின் மரணத்தைத் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என்று ஆணையிட்டான். அதுவே 'கிங்மிங்’ திருவிழாவாக சீனாவில் கொண்டாடப்படுகிறது.அங்கே அப்படி.. இங்கே நாம்?''
No comments:
Post a Comment