Saturday, 20 October 2012

தொழிற் கல்வி ஆசிரியர்கள் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 2ம் தேதி அனைத்து முதன்மை கல்வி அலுவலகம் முன்பும், டிசம்பர் 8ம் தேதி சென்னையிலும் மாநிலம் தழுவிய உண்ணாவிரதம்



         தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் கோவை மாவட்ட தலைவர் செந் தில்குமார் கூறியதாவது: தமிழகத்தில் பெரும் பாலான பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடப்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் தொழிற்கல்வி இருந்ததற்கான அடையா ளங்களே போய்விடும். அனைத்து பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவு துவக்கப்படவேண்டும். மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்விக்கு தனி இயக்குநரகம்
உருவாக்கவேண்டும். 20 ஆண்டுகள் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முழு ஓய்வூதியம் வழங்கவேண்டும். ஓய்வுபெற்ற 500க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி பாடப்பிரிவில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவேண்டும். ஊக்க ஊதியம், தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம், தர ஊதியம் உள்ளிட்டவை களை முறைப்படி வழங் கவேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 2ம் தேதி அனைத்து முதன்மை கல்வி அலுவலகம் முன்பும், டிசம்பர் 8ம் தேதி சென்னையிலும் மாநிலம் தழுவிய உண்ணாவிரதம் நடக்கிறது. இவ்வாறு செந்தில்குமார் கூறினார்.

No comments:

Post a Comment