தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, ஆசிரியர் தகுதித் தேர்விற்கு, 6.16 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்றைய தேர்வில், 23 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை. கடந்த முறையைப் போல், தேர்வு கடினமாக இருக்கும் என்ற அச்சத்தில், 1.40 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. தேர்வு முடிவுகள், ஒரு மாதத்தில் வெளியாகும் என, ஆசிரியர்
மத்திய அரசு கொண்டு வந்த, இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ், பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில், முதன்முறையாக, ஆசிரியர் தகுதித் தேர்வு, கடந்த ஜூலை, 12ம் தேதி நடந்தது. இதில், தேர்வு எழுதியவர்கள், 6.71 லட்சம் பேர். இந்த தேர்வில் பங்கேற்றவர்களில், வெறும், 2,448 பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி 0.36 சதவீதம் மட்டுமே.இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பித்த, 17 ஆயிரம் பேர் என, மொத்தம், 6.16 லட்சம் பேருக்கு, நேற்று மறுதேர்வு நடந்தது. தேர்வுக்காக, 1,094 மையங்கள் அமைக்கப்பட்டன. தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த, 6.16 லட்சம் பேரில், 1.40 லட்சம் பேர், பங்கேற்கவில்லை.
நேரம் அதிகரிப்பு
காலையில், இடைநிலை ஆசிரியருக்கான முதல்தாளும்,பிற்பகலில், பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் தாள் தேர்வும் நடந்தது. இரு தேர்வுகளும், தலா, 150 மதிப்பெண்களுக்கு நடந்தது. முந்தைய தேர்வில், தேர்வர்களுக்கு தேர்வு எழுத, ஒன்றரை மணி நேரம் மட்டுமே வழங்கப்பட்டது. "இந்த நேரம் போதாது' என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தேர்வு நேரத்தை, மூன்று மணி நேரமாக உயர்த்தி, டி.ஆர்.பி., அறிவித்தது.
22 ஆயிரம் இடங்கள்
ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமாக, 5,451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும், 18 ஆயிரத்து 932 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. முந்தைய தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,448 பேருக்கான இடங்களைத் தவிர்த்து, மீதமுள்ள, 22 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு, இத்தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள்நியமிக்கப்படுவர். தேர்வில், முதல் தாள் எளிதாகவும், இரண்டாம் தாளில், கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். ஒரு சில கேள்விகள், பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து தேர்வு செய்யப்பட்டிருந்ததால், அவற்றிற்கு விடையளிப்பதில் சிரமம் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.முந்தைய தகுதித் தேர்வு முடிவை வெளியிட, ஒன்றரை மாதங்களுக்கு மேல் ஆனது; ஆனால், இந்த முறை தேர்வு முடிவை, ஒரே மாதத்தில் வெளியிடத் தேவையான நடவடிக்கையை, ஆசிரியர் தேர்வு வாரியம் எடுத்துள்ளது.
No comments:
Post a Comment