தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் அடுத்த கல்வியாண்டு முதல் முப்பருவ முறை அமல்படுத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் தமிழகத்தில் சமச்சீர் கல்வி முழு அளவில் அமல் படுத்தப்பட்டுள் ளது. அதைத் தொடர்ந்து மாணவர்களின் மேம்பாட்டிற்காக முப்பருவ முறை அமல்படுத்தப்பட்டு புத்தங்களின் எடை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரேங்க் முறை ஒழிக்கப்பட்டு கிரேடு முறை அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி துவக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் தமிழக பள்ளி கல்வித் துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முப்பருவத் திட்ட முறை நடைமுறையில் உள்ளது. அடுத்த கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டு பாடப் புத்தங்கள் மூன்று தொகுப்பாக பிரிக்கப்பட உள்ளது.அதற்காக ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகங்களை முப்பருவங்களுக்கு தகுந்தவாறு பிரிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
இப்பணியில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் மேற்பார்வையில் இப்பணிகள் முடிக்கும் பொறு ப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மூன்று பருவ பாடப் புத்தங்களில் உள்ள பிழைகள் சரிபார்த்து பாடநூல் கழகத்திடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு பாடநூல் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தங்கள் அச்சிடும் பணி டிசம்பர் மாதத்தில் துவங்க உள்ளது. 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு புத்தங்கள் இரண்டு தொகுப்புகளாகவும், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் அதிகம் என்பதால் மூன்று தொகுப்புகளாகவும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவைப் படும் பாடப் புத்தங்களின் எண்ணிக்கை, தற்போதுள்ள 8ம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை போன்ற தகவல்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது என்றார்.
No comments:
Post a Comment