Saturday, 20 October 2012

ஆர்க்கிமிடீஸ்



ஆர்க்கிமிடீஸ் (கிமு 287 - கிமு 212) ஒரு கிரேக்கக் கணிதவியலாளரும்இயற்பியலாளரும்பொறியியலாளரும்,கண்டுபிடிப்பாளரும்வானியலாளரும் ஆவார். இவரைப்பற்றிக் குறைந்த தகவல்களே கிடைக்கின்ற போதும் இவர் பண்டைக் காலத்தின் முன்னணி அறிவியலாளர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார்நீர்நிலையியல்நிலையியல் ஆகிய துறைகளுக்கான அடிப்படைகளை அமைத்ததும்நெம்புகோல் தத்துவத்தை
விளக்கியதும் இயற்பியல் வளர்ச்சிக்கு இவரது பங்களிப்புக்களாகும்திருகு பம்பி உட்படப் பல இயந்திரங்களை இவர் உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது. படையெடுப்புக் கப்பல்களை தூக்கியெறியுமாறும், ஆடிகளைக் கொண்டு அவற்றை எரிக்க வல்லதுமான பொறிகளை இவர் வடிவமைத்ததாக கூறப்படுகின்றது.
ஆக்கிமிடீஸ் பண்டைக்காலத்தின் மிகச் சிறந்த கணிதவியலாளர் மட்டுமன்றி, எக்காலத்திலும் மிகச் சிறந்த கணிதவியலாளர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார். ஒரு பரவளைவின் கீழுள்ள பரப்பளவை( தொகையடி) ஒரு பல்கோணியின் பக்கங்களை அதிகரித்து ஓரங்களை ஒட்ட வைப்பதன் மூலம் (method of exhaustion)அண்ணளவாக கணக்கிட்டார். பை எனும் எண்ணையும் மதிப்பிட்டார். ஆர்க்கிமிடீசு சுருளி, சுற்றன்மேற்பரப்பு மூலம் பெறப்பட்ட கனவளவு, பெரிய எண்களை எழுதும் வழி ஆகியவை இவரின் மற்றைய பங்களிப்புக்களாகும்.
சிராக்குசா நகர் முற்றுகையின் போது ஆர்க்கிமிடீசை ஒன்றும் செய்யக்கூடாதென்ற உத்தரவையும் மீறி உரோமானியப் படைவீரன் ஒருவரால் கொல்லப்பட்டார். சிசரோ என்பவர் ஆர்க்கிமிடீசின் கல்லறையைக் கண்டதை விவரிக்கையில் அதன் மேல் உருளையை உள்தொடு உருண்டை இருந்ததென்கிறார். ஆர்க்கிமிடீசு உருண்டையின் மேற்பரப்பளவும், கனவளவும் உருளையினதன் மூன்றிலிரு மடங்காகும் என நிறுவியதை தன் வாழ்வின் சாதனையாகக் கருதினார்.
அவ்வப்போது அலெக்சாந்திரியாவின் கணிதவியலாளர்கள் இவரை மேற்கோள் காட்டியபோதும், இசிதோர் என்பவரே முதன்முறை கி.பி.530 இல் இவரது நூல்களைத் தொகுத்தார். 6ம் நூற்றாண்டளவில், இயூதோசியசு என்பான் விரிவுரை எழுதமட்டும் இவரது நூல்கள் பெரும் புழக்கத்துக்கு வரவில்லை. இவரது நூல்களில் நடுக்காலம் தாண்டியும் எஞ்சியவை மறுமலர்ச்சிக் காலத்தில் அறிஞரிடத்தே பெரு மதிப்புப் பெற்று விளங்கின. 1906ல் கண்டெடுக்கப்பட்ட ஆர்க்கிமிடீசின் தொல் கட்டமைப்பு மாறா உருமாற்றச்சுவடி, அறிஞர்க்கு அவர் தன் கணிதச் செய்கைவழி காணும் நுழைபுலத்தை வழங்கிற்று.

No comments:

Post a Comment