Sunday, 7 October 2012

அனைத்து ரயில்களின் இருப்பிடம் அறிய எஸ்.எம்.எஸ்., வசதி



அனைத்து ரயில்களின் இருப்பிடம் குறித்த தகவல்களை, எஸ்.எம்.எஸ்., மூலம் அறியும் வசதி, விரிவுபடுத்தப் பட்டுள்ளது. இதற்கு முன், சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ உட்பட, 36 முக்கிய ரயில்கள் குறித்து மட்டுமே, எஸ்.எம்.எஸ்., மற்றும் இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளும் வசதி இருந்தது. தற்போது, அனைத்து ரயில்கள் குறித்தும் அறியும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கு, மொபைல்போனில், Spot என்று ஆங்கிலத்தில், "டைப்' செய்து, 139 என்ற எண்ணுக்கு, எஸ்.எம். எஸ்., அனுப்பினால், விவரங்களை அறியலாம். இதுதவிர,www.trainenquiry.comஎன்ற இணைய தளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment