சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 2008ம் ஆண்டு வரை சிபிஎஸ்இ வாரியமே நேரடியாக தேர்வு நடத்தி வந்தது. 2009ம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ.யில் படிக்கும் மாணவர்கள் பள்ளி அளவிலும், வாரியம் அளவிலும் தேர்வு எழுதினர். இந்நிலையில், பள்ளி அளவில் தேர்வு எழுதும்
மாணவர்களுக்கு போதுமான தகுதி இருக்காது என்பதால் அவர்களுக்கு அரசு பள்ளிகளில் பிளஸ்,1ல் சேர அனுமதிக்க முடியாது என்று கேரள அரசு கடந்தாண்டு உத்தரவு பிறப்பித்தது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து முஸ்லிம் சர்வீஸ் சொசைட்டி என்ற நிறுவனமும், சில மாணவர்களும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை கடந்த மாதம் விசாரித்த நீதிமன்றம், கேரள அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித் தது. இந்த தடையை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு செய்தது.இதை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர், நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அரசு பள்ளிகளில் பிளஸ், 1ல் சேர சிபிஎஸ்இ பள்ளி அளவிலான தேர்வில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை அனுமதிக்க தேவையில்லை என்ற கேரள அரசின் உத்தரவை நீதிபதிகள் உறுதி செய்தனர்.
No comments:
Post a Comment