சி.பி.எஸ்.இ. 12–வது படித்த மாணவர்கள் என்ஜினீயரிங் படிப்பில் பி.இ. அல்லது பி.டெக். சேர அண்ணாபல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் கட் ஆப் மார்க் எப்படி கணக்கிடப்படும் என்று
கேட்டதற்கு அண்ணாபல்கலைக்கழக என்ஜினீயரிங் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறிய விளக்கம் வருமாறு:– சி.பி.எஸ்.இ. படித்த மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் 100 மார்க்குக்குத் தான் சான்றிதழ் வைத்துள்ளனர். எனவே அவர்கள் கணிதத்தில் எடுத்த மார்க் அப்படியே எடுத்துக்கொள்ளப்படும். மேலும் இயற்பியல் பாடத்தில் 100–க்கு என்ன மார்க் எடுத்தார்களோ அந்த மார்க்கு 2 ஆக வகுக்கப்படும். வேதியியல் பாடத்தில் 100–க்கு எடுத்த மதிப்பெண் 2 ஆக வகுக்கப்படும். உதாரணமாக ஒரு மாணவர் கணிதத்தில் 100–க்கு 100 மார்க் எடுத்தால் அந்த மார்க் 100 அப்படியே எடுத்துக்கொள்ளப்படும். அவர் இயற்பியலில் 99 மார்க்கு எடுத்தால் அது 2 ஆக வகுக்கப்பட்டு 49.5 மார்க் சேர்க்கப்படும். அவர் வேதியியல் பாடத்தில் 98 மார்க் எடுத்திருந்தால் அதை 2 ஆல் வகுத்தால் வரக்கூடிய 49 மார்க் எடுத்துக்கொள்ளப்படும். மொத்தத்தில் அந்த மாணவர் எடுத்த கட் ஆப் மார்க் 198.5 ஆகும். இவ்வாறு ரைமண்ட் தெரிவித்தார். அதுபோலத்தான் மருத்துவ கட் ஆப் மார்க்கும் கணக்கிடவேண்டும். இதில் கணிதத்திற்கு பதிலாக உயிரியலில் 100–க்கு எடுத்த மதிப்பெண் எடுத்துக்கொள்ளப்படும்.
No comments:
Post a Comment