Sunday, 26 May 2013

மருத்துவம், பொறியியல் படிப்புக்கு ஒரே நாளில் நுழைவு தேர்வு



            பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு, அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகள், ஒரே நாளில் நடத்தப்படுவதால், போட்டியாளர்கள், ஏதாவதொரு தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2விற்கு பின்,
உயர்கல்வியில், மருத்துவ படிப்பே, மாணவர்களின் முதல் தேர்வாக உள்ளது. ஆனால், பொறியியல் படிப்பை ஒப்பிடும்போது, மருத்துவ படிப்பிற்கு, கல்லூரிகளில் இடம் கிடைப்பதில், ஆண்டுதோறும், மாணவர்கள் மத்தியில், கடும் போட்டி நிலவி வருகிறது. மருத்துவம் படிக்க, வாய்ப்பு கிடைக்காதவர்களின் அடுத்த தேர்வாக, பொறியியல் உள்ளது .எனவே, தொழில்படிப்பு பயில விரும்பும் மாணவர்கள், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான, நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டி உள்ளது.
                       
இதன்படி, 2013-14ம் கல்வியாண்டில், ..டி., கல்வி நிறுவனங்களில், பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, முதல்கட்ட எழுத்துத் தேர்வு (ஜெ...,) கடந்த ஏப்ரலில் நடந்தது. இத்தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு, அடுத்த கட்ட தேர்வு, ஜூன், 2ம் தேதி, காலை, 9:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரையும், மதியம், 2:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரையும், நடக்க உள்ளது. அதே நாளில், காலை, 10:00 மணி முதல் மதியம், 12:30 மணி வரை, ஜிப்மர் மருத்துவ கல்வி நிறுவனமும், மருத்துவ படிப்புக்கான, நுழைவுத் தேர்வை நடத்துகிறது. பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு, அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகள் ஒரே நாளில் நடத்தப்படுவதால், போட்டியாளர்கள் ஏதாவதொரு தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
                                 
இதுகுறித்து, சென்னையைச் சேர்ந்த போட்டியாளர் ஒருவரின் தந்தை கூறியதாவது: என் மகன், கடந்த ஏப்ரலில் நடந்த, ஜெ..., தேர்வில் வெற்றிப் பெற்று, அடுத்த கட்ட தேர்வை எதிர்நோக்கி உள்ளான். அதேசமயம், எம்.பி.பி.எஸ்., படிப்பது, அவனின் கனவாக உள்ளபோது, "ஜிப்மர்" நடத்தும் நுழைவுத் தேர்வையும் கட்டாயம் எழுத வேண்டி உள்ளது. போட்டியாளர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இரண்டு நுழைவுத் தேர்வுகளையும், வெவ்வேறு நாட்களில் நடத்த, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்
.

No comments:

Post a Comment