இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், மாணவர் சேர்க்கையில், 25 சதவீத இட ஒதுக்கீட்டை நிரப்புவதற்கான அறிவிப்பை, தனியார் பள்ளிகள் இன்று வெளியிடுகின்றன. நாளை முதல்,9ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஆர்.டி.இ.,
சட்டம்தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை நடக்கும் வகுப்புகளில் உள்ளமொத்த இடங்களில், 25 சதவீத இடங்களை, ஏழை, எளிய, சமுதாயத்தில்நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் என, ஆர்.டி.இ.,சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டில் சேரும்குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை, அந்தந்த மாநில அரசுகள்வழங்குகின்றன. அதன்படி, 2013-14ம் கல்வி ஆண்டில், 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அறிவிப்பை,அனைத்து வகை தனியார் பள்ளிகளும் இன்று வெளியிட வேண்டும்; 3ம்தேதி முதல், 9ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்க வேண்டும் என,தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 25 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் நடக்கும் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, தனியார் பள்ளிகள்,இன்று வெளியிடுகின்றன. அரசு உத்தரவு ஒரு பக்கம் இருந்தாலும்,முன்னணி தனியார் பள்ளிகளில், ஏற்கனவே, "அட்மிஷன்' நடந்து முடிந்துவிட்டது என்பது, கல்வித் துறைக்கே நன்றாகத் தெரியும். எனினும், அந்தப்பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுப்பரா என்பது தெரியவில்லை.ஆங்கிலோஇந்தியப் பள்ளிஇரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலையில் உள்ளதனியார் பள்ளிகள் மட்டுமே, அரசின் உத்தரவை அமல்படுத்துவதற்கு முன்வந்துள்ளன. ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில், 3ம் தேதி முதல், விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, ஏற்கனவேவெளியிடப்பட்டுள்ளது. 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ்,விண்ணப்பங்களை பெற விரும்பும் பெற்றோர், பள்ளி நிர்வாகங்களிடம்கேட்டுப் பெறலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 9ம் தேதி, மாலை, 5:00 மணிக்குள், பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்து, கல்வித்துறை இயக்குனரக வட்டாரங்கள் கூறியதாவது: பெற்றோர்,விண்ணப்பத்தை சமர்ப்பித்ததும், விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டதற்கான ரசீதை, பள்ளி நிர்வாகங்கள், கண்டிப்பாக வழங்கவேண்டும். விண்ணப்பங்களை பெறுவதற்கான இறுதி நாள் முடிந்ததும்,குறிப்பிட்ட இட ஒதுக்கீட்டின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வுசெய்து, 11ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, சேர்க்கைக்கு தகுதி வாய்ந்தகுழந்தைகளின் பெயர்களை, பள்ளி அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். குலுக்கல் முறை தகுதி நீக்கம் செய்யப்பட்ட குழந்தைகளின்பெயர்கள், தேர்வு செய்யப்படாததற்கான காரணங்கள் ஆகியவற்றையும், வெளியிட வேண்டும். தகுதி வாய்ந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 25 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தால், 14ம் தேதி, குலுக்கல்முறையில், தேர்வு செய்ய வேண்டும். அரசு தெரிவித்துள்ள அனைத்துவிதிமுறைகளையும், பள்ளி நிர்வாகங்கள் கடைபிடிக்க வேண்டும்.தவறினால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கைஎடுக்கப்படும்.
No comments:
Post a Comment