Friday 3 May 2013

கலெக்டர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் உண்ணாவிரதம்



            குமரி மாவட்டத்தில் கோடை விடுமுறையிலும் தொடக்க கல்வி துறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த மாவட்ட நிர்வாகம் வாய்வழியாக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி, தமிழ்நாடு பள்ளி, கல்லூரி
மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. உண்ணாவிரத போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் விக்ரமன் தலைமை தாங்க, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சத்திய ஜெயசீலன் முன்னிலை வகித்தார். உண்ணாவிரத போராட்டத்தை ஜேக்டோஜியோ முன்னாள் அமைப்பாளர் ராபின்சன் ஜேக்கப் தொடங்கி வைத்தார்.
                               
இதில் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டமைப்பின் அமைப்பாளர் சுபாஷ் சந்திர போஸ், பிற சங்க நிர்வாகிகள் ரவிச்சந்திரன், ஜோஸ் டைட்டஸ், சுரேந்திரன், சுரேஷ்குமார், வின்சென்ட் செல்வராஜ், சுதாகர், சித்தார்த்தன், கலையரசு, ஜான் கென்னடி, தங்கமணி, தாணுபிள்ளை, மதிவாணன், சின்னப்பா, முத்து, ஜோஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். உண்ணாவிரதத்தை தமிழ்நாடு பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் அருட்செல்வன் முடித்து வைத்தார்
.

No comments:

Post a Comment