Sunday 12 May 2013

அண்ணாமலை பல்கலை ஊழியர்கள் வெளி மாநிலங்களுக்கு மாற்றம்



          அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், புரோக்கர்களாகச் செயல்பட்ட இரண்டு ஊழியர்கள், வெளி மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாக சிறப்பு
அதிகாரி, ஷிவ்தாஸ் மீனா, பல்கலைக் கழகத்தில் நடந்துள்ள முறைகேடுகள் மற்றும் நிதி நெருக்கடி குறித்து, ஆய்வு செய்து, நடவடிக்கை எடுத்து வருகிறார். துணைவேந்தர் மற்றும் பதிவாளர் அலுவலக பணியில் இருக்கும் உதவியாளர்கள் தான், முறைகேடுகளுக்கும், நிதி நெருக்கடிக்கும் காரணம் என, விசாரணையில் தெரியவந்தது. அதன் அடிப்படையில், முதல் கட்டமாக கடந்த, 5ம் தேதி, துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் ராஜசேகர், பதிவாளரின் நேர்முக உதவியாளர் நடராஜன் மற்றும் புரோக்கர்களாகச் செயல்பட்ட சரவணன், ரவி என்கிற ரவிச்சந்திரன் ஆகியோரை, துறை மாற்றம் செய்து, ஷிவ்தாஸ் மீனா உத்தரவிட்டார். புரோக்கர்களாகச் செயல்பட்ட பதிவாளர் அலுவலக தொழில்நுட்ப ஊழியராக இருந்த செந்தில், கர்நாடக மாநிலம், பெல்லாரி தொலை தூரக் கல்வி படிப்பு மையத்திற்கும், தொலை தூரக் கல்வி இயக்குனரக உதவி பேராசிரியர் முருகையன், ஆந்திர மாநிலம், விஜயவாடா படிப்பு மையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதில், முருகையன் உத்தரவை நேரில் வாங்க மறுத்ததால், பதிவு தபால் மூலம் அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment