Thursday 27 September 2012

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இலவச சிம்கார்டு



        கோவை கல்வி மாவட்டத்தில் பணியாற்றும் 240 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மொபைல்போன் சிம்கார்டு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி கல்வித்துறையின் அனைத்து தகவல்களும் உடனடியாக, தலைமை ஆசிரியர்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
          பள்ளி கல்வித்துறையின் தகவல்கள், தலைமை
ஆசிரியர்களை சென்றடைவதில், பல்வேறு சிக்கல்கள் தற்போது உள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில், பள்ளி கல்வித்துறை சார்பில், தலைமையாசிரியர்களுக்கு "சி.யு.ஜி&' திட்ட வசதி கொண்ட, மொபைல்போன் "சிம்கார்டு&' இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
                     கோவை மற்றும் பொள்ளாச்சியில், மொத்தம் 240 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிம்கார்டு வழங்கப்பட்டுள்ளது. கல்வி அலுவலர்கள் கூறுகையில், பள்ளி கல்வித்துறையின் அனைத்து தகவல்களும் உடனடியாக, தலைமை ஆசிரியர்களை சென்றடைய உதவும்.
பள்ளி கல்வித்துறை அல்லாத, மற்ற அழைப்புகளுக்கான விதிக்கப்படும் கட்டணத்தை, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் செலுத்த நேரிடும். மொபைல் போன்களை, சுவிட்ச்- ஆப் செய்யக் கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.

No comments:

Post a Comment