Tuesday 25 September 2012

என்.எஸ்.எஸ்.,மாணவர்களை வேலை வாங்கக் கூடாது



      என்.எஸ்.எஸ்., முகாம்களால், நூறு நாள் வேலை திட்டத்துக்கு இடையூறு கூடாது, என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பத்தும் வகையில், கலை நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள் நடத்துவதற்கு மட்டுமே என்.எஸ்.எஸ். மாணவர்களை பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
                      இந்திய அரசின் இளைஞர் விவகாரம்,
விளையாட்டு துறையின் கீழ் பள்ளி, கல்லூரிகளில் நாட்டு நலப்பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்) செயல்படுத்தப்படுகிறது. கிராமத்திலோ, புறநகர் பகுதியிலோ இத்திட்ட முகாம்களில் தூய்மை படுத்துதல், மரம் வளர்ப்பு,மேடை நிகழ்ச்சிகள், சமூக பிரச்னைகள், கல்வி, விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் பல வேலைகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
               ஒரு முகாமுக்கு 25 மாணவர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்காக, ஒரு பள்ளிக்கு 11,250 ரூபாய், நிதி வழங்கப்படுகிறது. காலாண்டு தேர்வு முடிந்த நிலையில், தற்போது முகாம்கள் நடத்தப்பட உள்ளன.இதில், மாணவர்களை கட்டாயப்படுத்தி, முள்வெட்டுதல், புல் வெட்டுதல், கிராமங்களை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை செய்யக் கூடாது.
             அதற்கென நூறு நாள் திட்ட பயனாளிகள் உள்ளனர். அவர்களின் வேலையை கெடுக்கும் வகையில், கிராம வேலைகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது. பெரும்பாலும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கலை நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள் நடத்த வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.
                     என்.எஸ்.எஸ்., ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும், நடத்தப்படும் முகாமுக்குரிய ரூபாய், அந்த கல்வியாண்டு ஏப்ரல் மாதத்துக்குள் வந்து விடும். ஆனால், கடந்த ஆண்டு செலவழித்த நிதி இதுவரை வரவில்லை. கேட்டால், முறையான பதிலும், இல்லை. வேறு வழியின்றி கையில் உள்ள பணத்தை போட்டு, இந்த ஆண்டு முகாம் நடத்தும் நிலை உள்ளது, என்றார்.

No comments:

Post a Comment