Saturday 22 September 2012

ஆசிரியர் தகுதி மறுதேர்வு: 6 லட்சம் விண்ணப்பங்கள் தயார்: சுர்ஜித் கே.சௌத்ரி தகவல்



         தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்களிலும் இந்த விண்ணப்பங்கள் வரும் திங்கள்கிழமை (செப்டம்பர் 24) முதல் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 28) வரை விநியோகம் செய்யப்பட உள்ளது.
        நீதிமன்ற வழக்குகள் முடிந்த பிறகு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்
 ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி. ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுத புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்காக 6 லட்சம் விண்ணப்பங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி கூறினார்.
          ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 12-ம் தேதி நடைபெற்றது. 6 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய இந்தத் தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிப்பதற்காக மறுதேர்வு அக்டோபர் 14-ம் தேதி நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்களிலும் இந்த விண்ணப்பங்கள் வரும் திங்கள்கிழமை (செப்டம்பர் 24) முதல் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 28) வரை விநியோகம் செய்யப்பட உள்ளது.

விண்ணப்ப விநியோகம் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி சனிக்கிழமை கூறியது: மறுதேர்வுக்கு புதிதாக விண்ணப்பிக்க விரும்புவோருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்ததால், விண்ணப்பங்களை விநியோகிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அக்டோபர் 14-ம் தேதி மறுதேர்வு நடைபெற்றவுடன் முடிவுகளை வெளியிடுவது உள்ளிட்ட பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும். வரும் நவம்பருக்குள் சுமார் 25 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
                        
மற்றொரு தேர்வா? ஆசிரியர் தகுதித் தேர்வு வெறும் தகுதித் தேர்வு மட்டுமே என்பதால், ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க மேலும் எத்தகைய தேர்வு முறையைப் பின்பற்றலாம் என்பது குறித்து அரசுக்குப் பரிந்துரைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சிவபதி தலைமையிலான இந்த நால்வர் குழு அடுத்த வாரம் கூடுகிறது. இந்தக் குழுவின் கூட்டத்தில், எத்தகைய முறையைப் பின்பற்றி ஆசிரியர்களைத் தேர்வு செய்வது என்று முடிவு செய்யப்படும். அதற்கு முன்னதாக, போட்டித் தேர்வா, நேர்முகத் தேர்வா என்பது குறித்து பதில் சொல்ல முடியாது.
                          202
பேர் தகுதி பெறவில்லை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,448 பேருக்கு நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் 202 பேர் உரிய தகுதியைப் பெறாதது கண்டறியப்பட்டது. மேலும் 37 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரவில்லை. சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும். இவர்கள் நேரடியாக ஆசிரியர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள். அமைச்சர் தலைமையிலான குழுவின் முடிவின் அடிப்படையில் ஏதேனும் ஒரு முறையில் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகே ஆசிரியர் பணி நியமனம் வழங்கப்படும். நீதிமன்ற வழக்குகள் முடிந்த பிறகு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றார் அவர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 191 பேர் ஒற்றை இலக்க மதிப்பெண்
                  
கடந்த ஜூலையில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 191 பேர் ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் பெற்று தோல்வியடைந்துள்ளனர். முதல் தாளில் 75 பேரும், இரண்டாம் தாளில் 116 பேரும் ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் மூன்று கேள்வியை நீக்கியதால், அந்தக் கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. முதல் தாளில் 52 பேரும், இரண்டாம் தாளில் 76 பேரும் மூன்று மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் பூஜ்யம் மதிப்பெண் பெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருந்ததாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

முதல் தாளில் 23 பேரும், இரண்டாம் தாளில் 40 பேரும் 4 முதல் 9 வரை மதிப்பெண் பெற்றுள்ளனர்
.

No comments:

Post a Comment