Tuesday 18 September 2012

டி.என்.பி.எஸ்.சி., மூலம் கடந்தாண்டு தேர்வு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக பணி வழங்க உத்தரவு



          டி.என்.பி.எஸ்.சி., மூலம் கடந்தாண்டு தேர்வு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, உடனே பணி வழங்க, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) மூலம், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குரூப்-4 தேர்வு, கடந்தாண்டு
நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற பார்வையற்றவர்களை, அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட துறைகளில் பணியமர்த்தாமல், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மறுத்தனர்.
                       இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள், தமிழக அரசு மற்றும் டி.என்.பி.எஸ்.சி.,யிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, தமிழக அரசின் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் செயலர் குற்றாலிங்கம், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கடந்த, 12ம் தேதி, கடிதம் அனுப்பியுள்ளார்.
                      அதில் குறிப்பிட்டிருப்பதாவது: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் விதி 22ன் படி, பணியாளர் தேர்வாணையம் மூலம், தேர்வு செய்யப்பட்ட பார்வையற்றவர்களை பணியமர்த்த மறுப்பது, அரசு விதிகளுக்கு எதிரானது. எனவே, உடனடியாக அவர்களை பணியமர்த்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment