Wednesday 5 September 2012

CSIR -UGC தேசியத் தகுதித் தேர்வு



கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகவும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் பெறவும் விரும்புகிற அறிவியல் பாட மாணவர்கள் சிஎஸ்ஐஆர்-யுஜிசி தேசியத் தகுதித்தேர்வை எழுத வேண்டும். தற்போது, பொறியியல் பட்டப் படிப்பு மாணவர்களும் இத்தேர்வை எழுத னுமதிக்கப்படுகிறார்கள்.
                   
கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகவும் ஜூனியர்
ரிசர்ச் ஃபெல்லோஷிப் பெற்று ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) நடத்தும் சிஎஸ்ஐஆர்-யுஜிசி தேசியத் தகுதித் தேர்வை (நெட்) எழுத வேண்டும். ஜூன், டிசம்பர் மாதங்களில் அதாவது ஆண்டுக்கு இரு முறை இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. கெமிக்கல் சயின்சஸ், எர்த், அட்மாஸ்பெரிக், ஓசன் அண்ட் பிளானெட்டரி சயின்சஸ், லைஃப் சயின்சஸ் பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் இத்தேர்வை எழுதலாம்.
                         தற்போது பொறியியல் படிப்புகளை முடித்த மாணவர்களும் இத்தேர்வை எழுத அனுமதிக்கப்படுகிறார்கள்இத்தேர்வு எழுத விரும்பும் பி.., பி.டெக். படித்த பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி மாணவர்கள் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். பொறியியல் படிக்கும் மாணவர்கள் பிஎச்டி படிக்க ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் இணைய தளத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
                          இந்தத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், இந்தியன் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய வங்கிகளின் குறிப்பிட்ட கிளைகளில் விண்ணப்பப் படிவங்களையும் விளக்கக் குறிப்புகளையும் ஆகஸ்ட் 21ம் தேதியிலிருந்து செப்டம்பர் 18ம் தேதி வரையிலும் பெறலாம். இதே தேதிக்குள் ஆன்லைன் மூலமும் விண்ணப்பங்களைப் பெறலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்கள், விண்ணப்பக் கட்டணத்தை இந்தியன் வங்கி சலான் மூலம் செலுத்த வேண்டும். இத்தேர்வு குறித்த விரிவான விவரங்கள், எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் இதழில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய Sr. Controller of Examination, Examination Unit, HRDG, CSIR Complex Opp Institute of Hotel Management, Library Avenue, Pusa, New Delhi - 110012    என்ற முகவரிக்கு செப்டம்பர் 24ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். நீண்டதூர பகுதிகளைச்  சேர்ந்த மாணவர்களின் விண்ணப்பங்கள் அக்டோபர் முதல் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். சிஎஸ்ஐஆர்-யுஜிசி தேர்வு டிசம்பர் 23ம் தேதி நடைபெறும். இத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இப்போதே விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment