Saturday 24 November 2012

பொதுத்தேர்வு: அரசு பள்ளிகளில்100 சதவீதம்தேர்ச்சி ; 2024ல் இலக்கு.



                            பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், 2024ம் ஆண்டில், 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்டுவதற்கு, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசு, தனியார், உதவிபெறும் பள்ளிகள் என, ஒட்டுமொத்தமாக, 55 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 1.35 கோடி மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 5.5 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பல ஆண்டுகளாக இருந்து வந்த கல்விமுறை, முந்தைய
தி.மு.., ஆட்சியில் மாற்றப்பட்டு, சமச்சீர் கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது.
                             
.தி.மு.., அரசு, இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்தி, 1 முதல் 8ம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டத்தையும், தொடர் மதிப்பீட்டு முறை திட்டத்தையும் அமல்படுத்தியுள்ளது. கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம், தொடர்ந்து ஒரே அளவில் இருந்து வருகிறது. தேர்ச்சியில் முரண்பாடு:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி சதவீதம், 85 முதல், 87 வரை இருந்து வருகிறது. இதிலும், தனியார் பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சி கணிசமாகவும், அரசுப் பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சி குறைவாகவும் உள்ளது. மேலும், தென் மாவட்டங்கள், கல்வி தரத்தில் உயர்ந்தும், வட மாவட்டங்கள் தாழ்வான நிலையிலும் உள்ளன.
                                   
கல்வித்துறை ஆய்வு:இந்த முரண்பாடுகள் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து, கடந்த பொதுத்தேர்வு தேர்ச்சியின் அடிப்படையில், பள்ளிக் கல்வித்துறை, விவரமாக ஆய்வு நடத்தி உள்ளது. ஒட்டுமொத்த தேர்ச்சியில், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைவதற்கான காரணங்களை ஆய்வு செய்ததில், தேர்ச்சி குறைந்த அனைத்துப் பள்ளிகளிலும், ஆசிரியர் பற்றாக்குறை அல்லது ஏற்கனவே உள்ள பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. கணிதத்தில் தோல்வி அதிகம்:பிளஸ் 2 தேர்ச்சி குறித்த ஆய்வு விவரம், தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, கணிதப் பாடத்தில், 10.8 சதவீதம் பேரும், வணிகவியல் பாடத்தில், 8.9 சதவீதம் பேரும் தோல்வி அடைந்துள்ளனர். பாட வாரியாக, அரசுப் பள்ளி மாணவர்கள் அடைந்துள்ள தோல்வி குறித்து, கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலப் பாடத்தில் தான், மிகக் குறைவான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

                                தமிழில், 0.8 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில், 2.20 சதவீதம் பேரும் மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திலும், மிகக் குறைவாக, 0.8 சதவீத மாணவர் மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர். 2,243 அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பெற்ற சராசரி மதிப்பெண்கள், 682. அரசுப் பள்ளி மாணவர்களில், 77 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். அதுவே, தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், 93.6 ஆக உள்ளது. இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது, இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு எடுத்துவரும் தொடர் சீர்திருத்த நடவடிக்கைகளால், அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்து வருகிறது. கடந்த பிளஸ் 2 தேர்வில், 325 அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளை மிஞ்சி, 93.6 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.
                               
தேர்ச்சி சதவீத முரண்பாடுகளை களைந்து, 2024ம் ஆண்டு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி மற்றும் கல்வி தரத்தில், சரிசமமான நிலையை ஏற்படுத்த வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
          *
ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்கள், வரும் கல்வியாண்டு துவங்குவதற்கு முன் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்படும்.
       *
மாணவர்கள் பாதிப்பை தவிர்க்க, தற்காலிகமாக, பெற்றோர்-ஆசிரியர் கழகம் சார்பில், ஆசிரியரை நியமித்துக்கொள்ள, பள்ளி நிர்வாகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
          *
திறமையான ஆசிரியர் பயிற்றுனர்களை, ஆசிரியர் பணிக்கு மாறுதல் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.
         * 60
சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி குறைந்த அரசுப் பள்ளிகளில், பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு, தொடர்ந்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது உடன், பாட நிபுணர்களின், வழிகாட்டுதல்களும் அளிக்கப்படும். இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால், இலக்கை எட்ட முடியும் என, நம்புகிறோம்.இவ்வாறு, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன
.

No comments:

Post a Comment