பாஸ்போர்ட் வழங்குவது விரைவுப்படுத்தப்படும் என, புதிதாக பொறுப்பேற்ற, மதுரை பாஸ்போர்ட் அதிகாரி மணீஸ்வர ராஜா தெரிவித்தார். கல்லூரிகளில் பாஸ்போர்ட் மேளாக்கள் நடத்தவும் திட்டம் உள்ளதாக அவர் கூறியுள்ளார். அதிகாரி சுந்தரராமன் ஓய்வு பெற்றதால்,திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மணீஸ்வரராஜா,பாஸ்போர்ட் அதிகாரியாக நேற்றுபொறுப்பேற்றார். 2002ல் "குஜராத் கேடர்' ஐ.எப்.எஸ்.,
ஆக தேர்வு ஆன இவர், 7 ஆண்டுகள் கிர் காடுகள் வன அதிகாரியாக பணியாற்றினார்.மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம்,மாற்றுப்பணியாக(டெபுடேஷன்)இப்பொறுப்பை ஏற்றார். அவர் கூறியதாவது: பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மதுரை சேவா கேந்திரத்தில் தினமும் 700 பேரும், திருநெல்வேலி சேவா கேந்திரத்தில் தினமும் 550 பேரும் விண்ணப்பிக்கின்றனர். விண்ணப்பங்கள் மீது போலீஸ் "வெரிபிகேஷனை' விரைவில் முடிக்க,மாவட்ட எஸ்.பி.,க்கள சந்தித்து ஆலோசிக்கஉள்ளேன்."பாஸ்போர்ட்' வழங்குவதை விரைவுப்படுத்தவும்,விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.கல்லூரிகளில் "பாஸ்போர்ட் மேளா'க்கள் நடத்தவும் திட்டம் உள்ளது என்றார்.
No comments:
Post a Comment