Wednesday 28 November 2012

கல்வித் துறையில் நிரப்பப்படாத 1,200 கருணை பணியிடங்கள்



               கல்வித் துறையில், கருணை அடிப்படையிலான, 1200 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 15 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இயக்குனர், கூடுதல் இயக்குனர், சி..., தொடக்க கல்வி அலுவலகங்களில் 15 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. ஆண்டுதோறும் பணி நியமனங்களில், 25 சதவீத காலியிடங்களை கருணை அடிப்படையில் காத்திருப்போருக்கு ஒதுக்க வேண்டும்
என்பது விதி. ஆனால், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்பட்ட போதும், 1997 முதல், கருணை அடிப்படையில் காத்திருப்பவர்களுக்கு பணி வழங்காததால் காலிப்பணியிடம் 1200 ஆக உயர்ந்துள்ளது.
                                  தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் பால்ராஜ் கூறியதாவது: இத்துறையில் உள்ள 15 ஆயிரம் பணியிடங்களில், 8 ஆயிரம் இடங்கள் வரை காலியாக உள்ளன. 15 ஆண்டுகளாக இப்பணியிடங்களை நிரப்பவில்லை. அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் உள்ளதால், அதிக இழப்புகளும் இந்த துறையில்தான் ஏற்படுகிறது. இதனால், 25 சதவீதம் இடஒதுக்கீடு என்பதையும் அதிகரிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment