Thursday, 22 November 2012

டிசம்பர் 30ம் தேதி ஒரே நாளில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, நெட் தேர்வு முதுநிலை பட்டதாரிகள் குழப்பம்



                                  பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கல்லூரி  விரிவுரையாளர் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு முதுநிலை பட்டப் படிப்பும் அதற்கு மேலும்  படித்தவர்கள் நெட் தேர்வு எழுத தகுதி உடையவர்கள். நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்த நிலையில், அன்றுதான் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளி யிடப்பட்டது. குரூப் 1 தேர்வுக்கு
விண்ணப்பிக்க 21 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி பட்டப் படிப்பாகும். இந்தத் தேர்வும் டிசம்பர் 30ம் தேதி நடத்தப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.குரூப் 1 தேர்வில் துணை கலெக்டர்  8, டிஎஸ்பி  4, வணிகவரித் துறை உதவி ஆணையர்  7, மாவட்ட பதிவாளர்  1, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்  5 ஆகிய 25 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளி  யிடப்பட்டுள்ளது. அகில இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி ஆகியவற்றை உள்ளடக்கிய இந்திய குடிமை பணிகளுக்கான தேர்வை அடுத்து மாநில அரசு நடத்தும் உயர்ந்த பணிகளுக்கான தேர்வு குரூப் 1 தேர்வு.இந்தத் தேர்வுக்கான கல்வித் தகுதி பட்டப் படிப்பாகும். ஏற்கெனவே நெட் தேர்வுக்கு விண்ணப்பித்த பலர் குரூப் 1ம் டிசம்பர் 30ம் தே நடத்துவதாக வெளியான அறிவிப்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். நெட் தேர்வை பொறுத்தவரை இந்தியா முழுவதும் ஒரே நாளில் 78 பாடங்களுக்கு அகில இந்திய அளவில் 77 மையங்களில் நடத்தப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கோவை, திருச்சி, சென்னை, மதுரை ஆகியவை தேர்வு மையங்களா கும்.இரு தேர்வும் ஒரே நாளில் வருவதால் ஏற்கனவே நெட் தேர்வுக்கு விண்ணப்பித்த முதுநிலை பட்டதாரிகள் பலர் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிப்பதா? வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர். எனவே குரூப் 1 தேர்வை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment