Friday 23 November 2012

பள்ளி நிர்வாகக் குழுவுக்கு பயிற்சியளிக்கும் கருத்தாளர்களுக்கு பயிற்சி



           அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு நடைபெறவுள்ள 3 நாள் பயிற்சியில் கருத்தாளர்களாக செயல்பட்டு பயிற்சி அளிக்கவுள்ள ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான இரு நாள் பயிற்சி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்தில் நடைபெற்றது. பயிற்சியில் ராஜபாளையம், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வள மையத்திற்குட்பட்ட 45 ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும்
45 தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராமசுப்பு தொடங்கி வைத்து உரையாற்றினார். ஆசிரியப் பயிற்றுநர் முருகு திருநாவுக்கரசு வரவேற்றார். ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த மற்றும் கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதற்கு ஆலோசனை வழங்குவதற்காக 6 பேர் கொண்ட பள்ளி நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
                      பயிற்சியில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், குழந்தைகள் உரிமைகள், தரமான கல்வி, நலவாழ்வு, சத்துணவு மற்றும் சுகாதாரம், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் உட்கூறுகள், தமிழக அரசின் நலத்திட்டங்கள், பதிவேடுகள் பராமரிப்பு, யோகா உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இதே பயிற்சி பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள குறுவளமைய்ததில் மூன்று நாட்கள் தரப்படவுள்ளது. பயிற்சியின் கருத்தாளர்களாக ஆசிரியப் பயிற்றுநர்கள் எல்.மேரி சீத்தா, சகாய விண்ணி ஆகியோர் செயல்பட்டனர். பயிற்சியை மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் சுடலைமணி பார்வையிட்டார்.

No comments:

Post a Comment