பள்ளிகளில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அலுவலக உதவியாளர்கள் பணி நிரந்தரம் கோரி அரசு அலுவலக உதவியாளர் சங்கம் சார்பில் டிசம்பர் 17ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் கல்வி துறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியமர்த்தப்பட்ட அலுவலக உதவியாளர்கள், இரவு காவலர்கள், தோட்டக்காரர்களின் அவசர கூட்டம்
சென்னையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் சங்க மாநில தலைவர் கே. கணேசன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் எம்.சண்முகம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில தலைவர் கணேசன், ‘’ தமிழ்நாடு பெற்றோர் & ஆசிரியர் கழகத்தின் மூலம் பள்ளி, கல்லூரிகளில் 10 ஆண்டுகளாக பணியாற்றிவரும் அலுவலக உதவியாளர்கள், இரவு காவலர்கள், தோட்டக்காரர்கள் தங்களது பணியை நிரந்தப்படுத்தக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர் ந்தனர். அவர்களுக்கு பணி வழங்க நீதிமன்றமும் உத்தரவிட்டது. நீதிமன்ற ஆணையை பள்ளி கல்வி செயலாளரிடம் கொடுத் தும் இதுவரை பணி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், முதல் வர் ஜெயலலிதா பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டுள்ளார். அதன்படி சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இரவு காவலர்கள், தோட்டக்காரர்கள் பணியிடங்கள் தமிழகம் முழுவதும் நிரப்பப்பட்டு வருகிறது. மீதமுள்ள பணியிடங்களை அடுத்த மாதத்திற்குள் நிரப்ப உள்ளனர். இந்த பணியிடங்களில் பெற்றோர், ஆசிரியர் கழகம் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக 556 பேர் பணியாற்றி வருபவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. எங்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு புதியவர்களை நியமிப் பது மிகப்பெரிய கொடுமை. எங்களது கோரிக்கையை வலியுறுத்தியும், முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் சென்னை யில் வருகிற 17ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட் டம் நடைபெறும்’’என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment