Friday 16 November 2012

ஐந்தாண்டுகளுக்குள் 1500 தொழிற்பயிற்சி மையங்கள்



                           அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் 1500 தொழிற்பயிற்சி மையங்கள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக டில்லியில் நடந்த ஒரு நிகழச்சியின்போது மத்திய அமைச்சர் மல்லிகானர்ஜூன கார்கே கூறியதாவது: 13-வது ஐந்தாண்டு திட்டத்தில் நாடு முழுவதும் 1500 தொழிற்பயிற்சி மையங்கள், 5000 திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. நாட்டில் வர்த்தக போட்டியினை சமாளிக்கவும், உற்பத்தி திறனை
அதிகரிக்க இதுபோன்ற திறன் மேம்பாட்டு மையங்கள் வாயிலாக 2020-ம் ஆண்டிற்குள் 100 மில்லியன் திறமை வாய்ந்தவர்களை உருவாக்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment