Friday 9 November 2012

குறைந்த செலவில் தரமான கல்வி எங்கே?



            உலகத்தரமான கல்வியை, நியாயமான கட்டணத்தில் வழங்கும் ஒரு நாடாக ரஷ்யா திகழ்வதால், அதிக பணபலமில்லாத பல இந்திய மாணவர்களுக்கு, வெளிநாட்டு கல்விக்கான ஒரு சிறந்த மாற்றிடமாக ரஷ்யா திகழ்கிறது. உலகின் சிறந்த 100 பல்கலைகள் பட்டியலில், ரஷ்யாவின் மருத்துவப் பல்கலைகள், சுமார் 30 நிலைகளை ஆக்ரமித்துள்ளன.
புகழ்பெற்ற மருத்துவக் கல்வி நிறுவனங்கள்
             உலக சுகாதார நிறுவனத்தின்(WHO), மருத்துவக் கல்வி
நிறுவனங்களுக்கான டைரக்டரியில், ரஷ்யாவின் 48 மருத்துவ பல்கலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ரஷ்யாவில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்கள், MCI(Medical council of India) சார்பாக, தேசிய தேர்வு வாரியம்(NBE) நடத்தும் Screening தேர்வில் தேர்ச்சிப் பெற்று, இந்தியாவில் மருத்துவராக பணியாற்றலாம்.
தகுதிநிலை மற்றும் காலகட்டம்
ரஷ்யாவில் மருத்துவம் சேர, பள்ளி மேல்நிலைப் படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றைப் பாடங்களாகப் படித்திருக்க வேண்டும் மற்றும் கூட்டுத்தொகையாக 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில வழியில் மருத்துவப் படிப்பை முடிக்க 6 ஆண்டுகளும், ரஷ்ய மொழி வழியில் நிறைவு செய்ய 7 ஆண்டுகளும் ஆகின்றன. அதேசமயம், பொறியியல் படிப்பிற்கு பள்ளி மேல்நிலைப் படிப்பில் 40% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் படிப்புகளில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், கெமிக்கல் மற்றும் கணிப்பொறி அறிவியல் ஆகிய சில துறைகள் மட்டுமே ஆங்கில வழியில் கற்பிக்கப்படுகின்றன.
முதுநிலைப் படிப்புகள்
ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில், இளநிலைப் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். பல்கலை, அமைவிடம் மற்றும் படிப்பைப் பொறுத்து, கட்டணமானது 1500 டாலர் முதல் 2500 டாலர் வரையிலும்(Russian medium), 3000 டாலர் முதல் 8000 டாலர் வரையிலும்(English medium) வேறுபடும்.
அதிக தகவல்களைப் பெற...
அனைத்து கல்வி நிறுவனங்களும், ரஷ்ய அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகின்றன.www.ruseducation.in என்ற வலைத்தளத்தின் மூலமாக, அதிகாரப்பூர்வ தகவல்களை அறிந்துகொள்ளலாம். Rus Education என்ற அதிகாரப்பூர்வ அமைப்பானது, ரஷ்ய தூதரகத்தின் கலாச்சார மையத்துடன் இணைந்து பணியாற்றுகிறது மற்றும் பல ரஷ்ய பல்கலைகள், வெளிநாட்டு மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை, ஆவண செயல்பாடுகள், அழைப்பு கடிதத்திற்கு விண்ணப்பித்தல் மற்றும் விசா ஸ்டாம்பிங் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள, இந்த அமைப்பிற்கு அதிகாரமளித்துள்ளன.
     இவைத்தவிர, Rus Education அமைப்பானது, டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, திருவனந்தபுரம், போபால், அகமதாபாத், பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் அலுவலகங்களையும் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment