Monday 5 November 2012

மூவர்ண தேசிய கொடிகளை பிளாஸ்டிக்கில் தயாரிக்க தடை



                        சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின கொண்டாட்டங்களின் போது, பயன்படுத்தப்படும் மூவர்ண கொடிகளை, பிளாஸ்டிக்கில் தயாரிப்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது."பேப்பரினால் தயாரிக்கப்பட்ட மூவர்ண கொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின கொண்டாட்டங்களின் போது, பொதுமக்கள், மார்பில் அணிந்து கொள்வதற்காக, பிளாஸ்டிக்கில்
தயாரிக்கப்பட்ட சிறிய மூவர்ண கொடிகள் விற்பனை செய்யப்பட்டன.மேலும், சிறு சிறு கொடிகள், மற்றும் தோரணம் கட்டுவதற்கும், பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட மூவர்ண கொடிகள் பயன்படுத்தப்பட்டன. பிளாஸ்டிக்கினால் தயாரிக்கபட்ட பொருட்களை பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும்படி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து, உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து பகுதிகளில், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க உத்தரவிடப்பட்டது.இதற்கு,பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, பிளாஸ்டிக்கினால் மூவர்ண கொடிகளை தயாரிப்பதற்கு தடை விதித்துள்ளது. சுதந்திர தினவிழா மற்றும் குடியரசு தினவிழா கொண்டாட்டங்களின் போது, பேப்பரினால் தயாரிக்கப்பட்ட மூவர்ண கொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.மேலும் அந்த உத்தரவில்,"விழா முடிந்ததும், சிறிய கொடிகளை, கீழே எறியவோ, கிழிக்கவோ கூடாது. இது தேசிய கொடியை அவமதித்ததாகும்' என குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment