Thursday 8 November 2012

தலைமையாசிரியர் பதவி:இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை



          உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில், இடைநிலை ஆசிரியர்கள் பாதிப்பதால், அவர்களுக்கும் பதவி உயர்வு வழங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களாகும், இடைநிலை ஆசிரியர்கள், பணிமூப்பு அடிப்படையில், உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்
ஆகின்றனர். இதில், நேரடி பட்டதாரி ஆசிரியருக்கும், இடைநிலை ஆசிரியராக இருந்து, பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கும் சமநிலை உள்ளது.
         தற்போது, அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்களாக, பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் 2002 முதல் பள்ளி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர். உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வின் போது, ஆசிரியர் பயிற்றுனர்களாக இருந்து, பட்டதாரி ஆசிரியர்களாக வந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதனால் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கின்றனர்.இதன் மீது, பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து, ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு 50 , இடைநிலை ஆசிரியர்களுக்கு 50 சதவீதம் என, ஒதுக்கீடு வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment