Tuesday 20 November 2012

230 மேல்நிலைப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த 260 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு.


             மாநிலத்தில், 236 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, 260 கோடி ரூபாய் செலவு செய்யப்படும் என, பள்ளிக்கல்வி செயலர் சபிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், "நபார்டு திட்டத்தின் கீழ், இந்த பள்ளிகளில், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் மற்றும் சுற்றுச்சுவர்கள் அமைக்கப்படும்" என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும், எத்தகைய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்; ஒவ்வொரு பள்ளிகளுக்குமான நிதி ஒதுக்கீடு எவ்வளவு போன்ற விவரங்களும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment