Tuesday 20 November 2012

இசைக்கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் உதவித்தொகை



                           அரசு இசைக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.500 ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை மற்றும் திருவையாறு ஆகிய இடங்களில் அரசு இசைக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.250
கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
         இந்தத் தொகையானது இனிமேல் ரூ.500 என்ற அளவில் உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் 691 மாணவர்கள் பயனடைவார்கள். அரசுக்கு, ரூ.15 லட்சத்து 48 ஆயிரம் கூடுதல் செலவாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment