Tuesday 20 November 2012

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என மேல்நிலைப்பள்ளி தொழிற்சங்க ஆசிரியர் கழகம் கோரிக்கை



                              தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என மேல்நிலைப்பள்ளி தொழிற்சங்க ஆசிரியர் கழகம் கோரிக்கை . தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி  தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் திருவாரூர், நாகை மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருவாரூரில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் .பி.குமணன் தலை மை தாங்கினார். மாவட்ட செயலாளர் கே.எஸ்.சம்பத் நாகராஜன், மாவட்ட ஒருங் கிணைப்பாளர்
வி.முருகவேல், மாவட்ட அமைப்பு செயலாளர் பி.திருநாவுக்கரசு, நாகை மாவட்ட பொருளாளர் .முருகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்கூட்டத்தில் மாநில தலைவர் டி.ராமச்சந்திரன், மாநில பொருளாளர் எஸ்.ரெங்க நாதன், மாநில  துணைத் தலைவர் என்.ரவி, இணை செயலாளர்கள் நாகை என்.ரவி, பி.சேரமான், பி.ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்
                 கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில பொதுச் செயலாளர் எஸ்.என்.ஜனார்த்தனம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது: 34 ஆண்டுகளாக பதவி உயர்வு இன்றி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து வகை ஆசிரியர்களும் பதவி உயர்வு பெற்று செல்லும் நிலையில் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டும் பதவி உயர்வு மறுக்கப்படுவதை மாற்றி உடன் பதவி உயர்வு வழங்க வேண்டும்நீதிமன்ற வழிக் காட்டுதலின்படி தொழிற்கல்வி ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தினை ஓய்வூதியம் பெற கணக்கிட வேண்டும். அனைத்து வகை ஆசிரியர் களுக்கு வழங்குவது போல் வெவ்வேறு பாடத்தில் உயர் கல்வி பெற்றுள்ள தொழில் கல்வி ஆசிரியர்களுக்கும் 2 ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்க வேண்டும்தொழில்கல்வி ஆசிரியர் களுக்கு பணி வரன்முறை செய்வதுடன், பொதுமாறுதல் கலந்தாய்வு மூலம் பணி மாறுதலும் வழங்க வேண் டும்இவ்வாறு அவர் கூறினார். முடிவாக தலைமையிட செயலர் எஸ்.தினகரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment