GO.194 SCHOOL
EDN (E2) DEPT DT.10.10.2006 - M.Phil INCENTIVE FOR PG TRs REG CLICK HERE...
GO.283 SCHOOL EDN (E2) DEPT DT.10.10.2006 - M.Phil INCENTIVE FOR HSS HMs - EXTENDED REG CLICK HERE...
GO. (1D) NO.18 (SCHOOL EDUCATION (E2) DEPARTMENT) DATED.18.01.2013 - M.PHIL., PHD., SECOND INCENTIVE FOR BT & HMs REG - PROC CLICK HERE...
பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் ஊக்க ஊதியம் பெற புதிதாக எம்.பில் / பி.எச்டி போன்ற
உயர்க்கல்வித் தகுதிகள் சேர்த்து ஊக்க ஊதியம் வழங்க அரசாணை எண்.18 உயர்க்கல்வித் துறை நாள்.18.01.2013 மூலம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெற அணுகிய போது பல்வேறு தரப்பு பதில்கள் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகின. அதேபோல் நிதிசார்ந்த அரசாணைகளில் பணபலனானது எந்த தேதி முதல் அமுலுக்கு வரும் என்று குறிப்பிடப்படும் என்றும் ஆனால் இந்த தேதி எதுவும் அரசாணையில் குறிப்பிடப்படவில்லை என்றும் குழப்பம் நிலவி வருகிறது. அவ்வாறு குறிப்பிடாதபட்சத்தில் எடுத்துக்காட்டுகளாக சில அரசாணைகள் மூலம் நிறைவேற்றப்பட்ட பணப்பலன்கள் குறித்து ஆராய்வோம்.GO.283 SCHOOL EDN (E2) DEPT DT.10.10.2006 - M.Phil INCENTIVE FOR HSS HMs - EXTENDED REG CLICK HERE...
GO. (1D) NO.18 (SCHOOL EDUCATION (E2) DEPARTMENT) DATED.18.01.2013 - M.PHIL., PHD., SECOND INCENTIVE FOR BT & HMs REG - PROC CLICK HERE...
பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் ஊக்க ஊதியம் பெற புதிதாக எம்.பில் / பி.எச்டி போன்ற
முதலில் அரசாணை எண். 194 பள்ளிக்கல்வித்துறை நாள். 10.10.2006ன் படி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.பில்., ஊக்க ஊதிய உயர்விற்கான திருத்தம் செய்து ஆணையிடப்பட்டது. (பத்தி-4)அதில் 1.3.1993 என்ற வாசகத்தை நீக்கி அரசு ஆணையிட்டது. எந்த தேதியில் முதல் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்ற வாசகம்அந்த அரசாணையில் இடம் பெறவில்லை, ஆனால் அனைத்து முதுகலை ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் அவர்கள் எம்.பில்., உயர்கல்வித் தகுதி பெற்ற நாள் முதல் இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்கப்பட்டது.
இரண்டாவதாக அரசாணை எண்.283 பள்ளிக்கல்வித்துறை நாள்.28.112007ன் படி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு எம்.பில்., கல்வித்தகுதிக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வினை (பத்தி-7)இவ்வரசாணை வெளியிடப்படும் நாள் முதல் என்று வழங்க அனுமதித்து ஆணை வழங்கப்பட்டது. ஆனால் அரசாணை எண். 18 பள்ளிக்கல்வித்துறை நாள்.18.1.2013ல் எம்.எட்., கல்வித்தகுதியை தொலைத்தூரக் கல்வி வாயிலாக பெற இயலாத சூழ்நிலை உள்ளது எனவும், ஆசிரியர்கள் எம்.பில்., / பி.எச்.டி., போன்ற கல்வித்தகுதிகள் தொலைத்தூரக் கல்வி மூலம் பெறும் நிலை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாணை எண்.1024 கல்வி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நாள்.09.12.1993ன் படி அனுமதிக்கப்பட்ட தகுதியான உயர்க்கல்வி எம்.எட்., என்பதற்கு பதிலாக, எம்.எட்., அல்லது எம்.பில்., அல்லது பி.எச்டி பட்டம் பெற்றிருந்தால் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்விற்கான உயர்க்கல்வியாக கருதி ஊக்க ஊதியம் வழங்கலாம் என மிக தெளிவாக அரசாணையில் குறிப்பிடப்பட்டிருப்பதால் எம்.எட்., உயர்க்கல்விக்கு வழங்கப்படும் அதாவது 09.12.1993 நாள் முதல் எம்.பில்., / பி.எச்டி கல்வித் தகுதிக்கும் இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்க தடையேதுமில்லை என்பதை தெரிவித்துகொள்கிறோம்.
No comments:
Post a Comment