தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 4,615 வி.ஏ.ஓ.,க்களுக்கு, பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க, அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 118 பயிற்சி மையங்களை அமைக்கப்பட உள்ளன. இதற்காக 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள கிராமங்களில் பணியாற்றும், கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.,)க்கள், தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில், பணித்திறன் மேம்பாடு அடைந்திருக்க வேண்டும். இதற்கு, அவர்களுக்கு தேவையான, கிராம நிர்வாக பயிற்சி மற்றும் நில அளவை தொடர்பான பயிற்சிகள் அளிக்க வேண்டியது அவசியம். இதை கருத்தில் கொண்டு, சமீபத்தில் புதியதாக நியமிக்கப்பட்ட, 4,615 வி.ஏ.ஓ.,க்களுக்கு பயிற்சியளிக்கப்பட உள்ளது. இதற்கு வசதியாக, அனைத்து மாவட்டங்களிலும், 118 பயிற்சி மையங்கள் ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த மையங்களுக்கு தேவையான தளவாடங்கள் மற்றும் இதர செலவினங்களுருக்காக, 1 கோடி ரூபாய் ஒதுக்கியும் அவர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment