Tuesday, 29 January 2013

பணிவரன் முறை ஊதியத்திற்க்காக காத்திருக்கும் ஆசிரியர்கள்



              புதிதாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களின், சான்றிதழை சரிபார்த்து அனுப்புவதற்கு, கல்வித்துறை அதிகாரிகள் இழுத்தடிப்பதால், பணி வரன்முறை ஊதியம் பெற முடியாமல், ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர். கல்வித் துறையில், தொடக்க, இடைநிலை, உயர்நிலை,
மேல்நிலைகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்களின், சான்றிதழ் சரிபார்ப்பு, இரு கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, டிகிரி சான்றிதழ், சம்பந்தப்பட்ட பல்கலைக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ், மாநில தேர்வுத்துறை இயக்குனரகத்துக்கும் அனுப்பப்படுகின்றன. பல்கலை அளவில் அனுப்பப்படும் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, உடனே அனுப்பப்படுகிறது. ஆனால், தேர்வுத்துறை இயக்குனரகத்துக்கு அனுப்பப்படும் சான்றிதழ்கள், இழுத்தடித்து வழங்கப்படுகிறது. இதனால், ஆசிரியர்கள் பணி வரன்முறை செய்வதில், தாமத நிலை நீடிக்கிறது.
                           
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல சலுகைகள் இன்றி அவதிப்படுகின்றனர். இவற்றை பெற விரும்பும் ஆசிரியர்கள், செலவு செய்து, சென்னைக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, 10ம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்க்கும் அதிகாரத்தை, அந்தந்த மாவட்ட, சி...,க்களுக்கு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இல்லையேல், அந்தந்த மாவட்டங்களிலேயே, மாற்று ஏற்பாட்டை அரசு மேற்கொள்ள வேண்டும்
.

No comments:

Post a Comment