Sunday, 27 January 2013

Professional Tax | புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பிப்ரவரி 2013 தொழில் வரி உண்டா ?


ஆறுமாத வருமான அடிப்படையில் இந்த தொழில் வரி ஏப்ரல் முதல்  செப்டம்பர் வரை மற்றும் அக்டோபர் முதல்  மார்ச் வரை மாநில அரசுக்கு செலுத்தப்படுகிறது. இது மத்திய அரசுக்கு செலுத்தும் வருமான வரியில் கழித்தம் செய்யப்படும். இவ்வரியினை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள்
செலுத்த வேண்டியதில்லை ( அரசாணை2726/(நிதி) நாள் 01.11.1994: தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியிடு நாள் :25.06.1992.).புதிய ஆசிரியர்கள் பணி சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகவில்லை என்றாலும், அவர்கள் தொழில் செலுத்தும் அளவு உரிய தொகையை ஊதியமாக பெற்று இருந்தால் அவர்கள் பிப்ரவரி 2013க்கு தொழில் வரி செலுத்த வேண்டும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 17.12.2012 அன்று நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய்.24,888 மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய்.15,590 சம்பளமாக கிடைக்க வாய்ப்புள்ளதால் 28.02.2013 வரை முறையே ரூ.61,819 மற்றும் ரூ.38,724 வர வாய்ப்புள்ளது. எனவே பட்டதாரி ஆசிரியர்கள் ரூ.706ம் இடைநிலை ஆசிரியர்கள் ரூ.238 செலுத்தவேண்டி இருக்கும்.

தொழில் வரி
அரையாண்டு வருமானம்  :  21 ,000   வரை   இல்லை
21,001  முதல் 30,000 வரை
ரூ. 94
30,001 முதல்  45,000  வரை
ரூ.238
45,001  முதல் 60,000 வரை
ரூ.469
60,001 முதல்  75,000 வரை
ரூ.706
75,001 முதல்
ரூ.938

No comments:

Post a Comment