தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மிலாடி நபி நாளன்று வாக்குச்சாவடி உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஆசிரியர்கள் வர வேண்டும் என கல்வித்துறை செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார். தேசிய வாக்காளர் தினம் வரும் 25ம் தேதி நாடு முழுவதும்
கொண்டப்படுகிறது. இந்த நாளில் வாக்காளர் பட்டியலில் புதிதாக இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் வரும் 25ம் தேதி மிலாடி நபி வருவதால் அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அன்றையை தினம் வாக்காளர் பட்டியல் தொடர்பான விவரங்கள் பாதிக்கப்படும் என கருதப்பட்டது.இந்நிலையில் இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கல்வித் துறை செயலாளர் சபிதா அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: வரும் 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்த தினத்தில் மிலாடி நபி வருவதால் அன்றை தினம் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் வாக்குசாவடி உள்ள அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் திறந்து இருக்க வேண்டும். அன்றையை தினத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும். தேசிய வாக்காளர் தினம் தொடர்பான விவரங்களை அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும். இதை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment