Wednesday, 23 January 2013

இலவச மடிக்கணினியில் வகுப்பு நடத்த புதிய திட்டம்



               அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு, கல்வி மென்பொருள் மேம்பாட்டு பயிற்சி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அரசு அளிக்கும் இலவச மடிக்கணினி மூலம், வகுப்பு நடத்தும் வகையில், இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு,
கணினி குறித்த அறிவை வளர்க்கும் வகையில், கல்வி மென்பொருள் மேம்பாட்டு பயிற்சி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆறு மாத பயிற்சி, கணினி குறித்த பொது அறிவு, மென்பொருள் உருவாக்கம் உள்ளிட்டவை கற்று தரப்பட உள்ளன. முன்னணி, கணினி நிறுவனங்கள், இந்தப் பயிற்சியை அளிக்கின்றனஅரசு கல்லூரிகளில், இலவச மடிக் கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை சரியாக பயன்படுத்தும் வகையில், கல்லூரி ஆசிரியர்களுக்கு மென்பொருள் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற பேராசிரியர்கள், தங்களின் பாடங்களுக்கு, அவர்களே மென்பொருளை உருவாக்கி கொள்ளலாம். இதன் மூலம், கணினி உதவியுடன், மாணவர்களுக்கு பாடங்களை கற்று தரவும் முடியும்.
                               இதுகுறித்து, தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்ற துணை தலைவர் சிந்தியா பாண்டியன் கூறியதாவது: ஒரே முறையில் மாணவர்கள் கல்வி கற்பதால், விரைவில் சலித்துவிடுகிறது. தற்போது அறிமுகப்படும் புதிய முறையால், "ஸ்மாட் கிளாஸ்" முறை உருவாகிறதுமாணவர்கள் மடிக்கணினியை கல்லூரிகளில் பயன்படுத்த முடியும். திட்டத்துக்கான செலவு, ஆசிரியர்களுக்கு, மென்பொருள் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தை தேர்வு செய்தல் போன்றவை விவாதிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இத்திட்டம் நடைமுறைக்கு வரும். இவ்வாறு சிந்தியா பாண்டியன் கூறினார்.

No comments:

Post a Comment