Sunday, 27 January 2013

அனைவருக்கும் கல்வி இயக்கம்-தமிழகம் முழுவதும் 714 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 44 உண்டு உறைவிடப் பள்ளிகள் புதிதாக தொடங்கவும், 312 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் இலக்கு நிர்ணயித்துள்ளது



                       தொடக்கக் கல்வித்துறையின் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 714 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 44 உண்டு உறைவிடப் பள்ளிகள் புதிதாக தொடங்கவும், 312 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் எஸ்எஸ்ஏ இலக்கு
நிர்ணயித்துள்ளது.எனவே அந்தந்த மா வட்ட எஸ்எஸ்ஏ முதன் மை கல்வி அலுவலர்களிடமிருந்து பள்ளிகளின் பட்டியலை பெற்று, அப்பள்ளிகள் அமைய உள்ள குடியிருப்புகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். பின்னர் முன்னுரிமை அடிப்படையில் பள்ளிகளின் பட்டியல் தயாரிக்க வேண்டும். எஸ்எஸ்ஏ நிர்ணயித்துள்ள பள்ளிகளை விட கூடுதல் பள்ளிகள் துவங்க வேண்டும் அல்லது தரம் உயர்த்த வேண்டும் என்றால், அவற்றையும் பட்டியலில் சேர்க்கலாம்.
            எஸ்எஸ்ஏ தேர்வு செய்துள்ள பகுதிகளில் புதிய பள்ளிகள் துவங்குதல் அல்லது தரம் உயர்த்துவதற்கான நிபந்தனை நிறைவு செய்யப்படவில்லை என்றால், வேறு இடத்தில் பள்ளியை துவங்கவும் மற்றும் வேறு பள்ளியை தரம் உயர்த்தவும் பரிந்துரை செய்யலாம். எஸ்எஸ்ஏ நிர்ணயித்துள்ள பள்ளிகளின் எண்ணிக்கைக்கு குறையாமல் பட்டியல் அமைய வேண்டும். தயாரித்த பட்டியலை தொடக்கக் கல்வித்துறை இயக்குநரகத்தில் நேரடியாக ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது
.

No comments:

Post a Comment