கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 29ல் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவு செய்தனர். மாநிலத்தில் காலியான 35 டி.இ.ஓ.,க்கள் இடங்களை நிரப்ப வேண்டும். உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திய பின்பு,
மாணவர்கள், பள்ளி விவரங்களை ஆன்லைன் மூலம் பதியும் பணியை நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு அரசு திட்டங்களை வழங்க தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து சி.இ.ஒ., அலுவலங்கள் முன், போராட்டம் நடத்த உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இதில் பங்கேற்க தலைமையாசிரியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுக்க முடிவு செய்துள்ளனர். பத்தாம் மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு இறுதி திருப்புதல் தேர்வு, செய்முறை தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தலைமையாசிரியர்களின் விடுப்பு போராட்டம் நடத்தவுள்ளனர். சங்க மாநில பொது செயலாளர் சாமிசத்தியமூர்த்தி,கல்வித் துறை இயக்குனரிடம் கோரிக்கை மனு அளித்தோம். நடவடிக்கை இல்லை. பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் சங்கங்களுடன் இணைந்து போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம், என்றார்.
No comments:
Post a Comment