"பள்ளிகளில் பாலியல் குற்றம்புரியும் ஆசிரியர்கள் நீக்கப்படுவர்" என கல்வித்துறை எச்சரித்துள்ளது. சமீபத்தில், தகுதித் தேர்வு மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சார்பில், பணியிடை பயிற்சி
நடந்தது. இதில், அலுவலக மேலாண்மை, சுற்றுப்புற சூழல், சுகாதாரம் உட்பட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தற்போது, சில பள்ளிகளில் ஆசிரியர் மீது பாலியல் புகார் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், "ஆசிரியர்களின் மீதான புகார் உண்மை என, நிரூபிக்கப்பட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்" என, புது ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "புது ஆசிரியர்களுக்கு, இடைநிலை கல்வி திட்டம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. பாலியல் குற்ற செயல்களை தடுக்கும் வகையில், இதில் ஆசிரியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
No comments:
Post a Comment