அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓராண்டு பணி நீடிப்பு செய்து தமிக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக கல்வித்துறைச் செயலாளர் சபிதா
வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 2011-12ம் கல்வியாண்டில் 710 ஒன்றிய பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாகவும், 710 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட ஒரு உயர்நிலைப்பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடமும், ஒரு ஆய்வக உதவி யாளர் பணியிடமும், ஒரு உதவியாளர் பணியிடமும் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்டது. அதன்படி 3550பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடமும், 710 ஆய்வக உதவியாளர் பணியிடமும், 710 இளநிலை உதவியாளர் பணியிடமும் என மொத்தம் 4970 ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது. இவர்களுக்கு அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் மாநில அரசின் நிதியில் இருந்து ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இப்பணியிடங்கள் 7-12-2011 முதல் நிரப்பப்பட்டு 6-12-12 அன்றுடன் ஒரு ஆண்டு முடிவுபெற்றுள்ளதால் இப்பணியிடங்களை 7-12-2012 முதல் 5 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வழங்கிடுமாறு அரசை வேண்டியுள்ளனர். இதை கருத்தில் கொண்டு 7-12-12 முதல் மேலும் ஓராண்டு காலத்துக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment