Sunday, 24 March 2013

தேர்வுத்துறை நடவடிக்கையால் முதுகலை ஆசிரியர்கள் குழப்பம் - நாளிதழ் செய்தி



              தேர்வுத் துறையின் குளறுபடியான உத்தரவால், தேர்வுப் பணிகளுக்குச் செல்வதா, விடைத்தாள் திருத்தும் பணிகளுக்குச் செல்வதா என, தெரியாமல், முதுகலை ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். பிளஸ் 2 தேர்வுகள்,
27ம் தேதி வரை நடக்கின்றன. மறுநாளில் இருந்து, விடைத்தாள் திருத்துவது என, முதலில், தேர்வுத்துறை முடிவு செய்திருந்தது. திடீரென, இரு நாட்கள் முன்னதாக, 25ம் தேதியில் இருந்தே, விடைத்தாள் திருத்தும் பணியை துவங்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவுகள், முதுகலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
                              
தேர்வுப் பணிகளில், துறை அலுவலர்களாக, மூத்த முதுகலை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்; விடைத்தாள் திருத்தும் மையங்களுக்குச் செல்லும் போது, விடைத்தாள் திருத்தும் பணியின் தலைமை அலுவலர்களாக, பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு கீழ், ஜூனியர் முதுகலை ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுவர்.இந்நிலையில், மூத்த முதுகலை ஆசிரியர்களை, விடைத்தாள் திருத்தும் பணிகளின், தலைமை அலுவலர்களாக பணி நியமனம் செய்து, தேர்வுத்துறை உத்தரவு அனுப்பி உள்ளது. தேர்வுப் பணிகள், இன்னும் இரு நாட்கள் இருக்கும் போது, தேர்வுப் பணிகளுக்குச் செல்வதா, விடைத்தாள் திருத்தும் பணிகளுக்குச் செல்வதா என, தெரியாமல், மூத்த முதுகலை ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
                         
இதுகுறித்து, முதுகலை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:இரண்டு நாளில், ஒன்றும் நடந்து விடப்போவதில்லை. தேர்வு முடிந்த மறு நாளில் இருந்து, விடைத்தாள் திருத்தும் பணிகளை துவங்கலாம். ஏற்கனவே, இப்படித் தான் கூறியிருந்தனர். இப்போது, 25ம் தேதியில் இருந்தே, பணிகளை துவக்க வேண்டும் என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு, தேர்வு முடிந்த பின் தான், விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது.இவ்வாறு அவர் கூறினார்
.

No comments:

Post a Comment