ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், தகுதித்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி பெற்று, பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், சம்பளமின்றி தவிக்கின்றனர். 2012 நவம்பரில் தேர்வான இவர்கள், காலிப்பணியிடங்களில் நியமனம்
செய்யப்பட்டனர். தற்போது, இவர்கள், சம்பளமின்றி தவித்து வருகின்றனர். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "" காலிப்பணியிடங்கள் மாவட்டத்தில் இல்லாத நிலையில், பணிகளில் ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களுக்கு சம்பளம் நவ., முதல் வழங்கப்படாமல் உள்ளது. இந்த மாதத்தில் அதிக ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறும் நிலையில், காலிப்பணியிடங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அடுத்த மாதம் முதல் அனைத்து ஆசிரியர்களுக்கும் சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.
No comments:
Post a Comment