தமிழகத்தில் கடந்த 2004 முநடப்பாண்டு ரை காணாமல் போய் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் உள்ள 1127 மாணவ, மாணவியர் நிலை குறித்து அறிய இந்த வழக்குகளை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க அரசு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இதுவரை 557 மாணவர்கள், 570 மாணவிகள் கண்டுபிடிக்கப்படாமல்
இருக்கின்றனர். இவர்களது நிலை என்ன என்பதே இதுவரை தெரியவில்லை. புகார் கொடு்த்த பெற்றோர் மற்று்ம் உறவினர்கள் தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையாய் நடக்கின்றனர். சில சம்பவங்களில் நீதிமன்றங்களில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. காணாமல் போனவர் தொடர்பாக வழக்குகள் ஆய்வு செய்து துரித நடவடிக்கை மேற்கொள்ள மாநில போலீஸ் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.பணத்திற்காக பெண்கள், மாணவிகள் கடத்தி செல்லப்படுவதை கண்காணித்து விசாரிக்க சிபிசிஐடியில் கடத்தல் விசாரணை பிரிவு செயல்படுகிறது. நீண்ட காலமாக கண்டுபிடிக்கப்படாத வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவலர்கள் கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment