Monday 21 January 2013

1.21 லட்சம் மாணவர்களுக்கு கணித உபகரணப் பெட்டி



                  நாகை மாவட்டத்தில் 457 பள்ளிகளைச் சேர்ந்த 1.21 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா கணித உபகரணப் பெட்டிகள் வழங்கப்படவுள்ளன என்றார் மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.. ஜெயபால்.நாகை மாவட்டம், கீழ்வேளூர்
அஞ்சுவட்டத்தம்மன் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கணித உபகரணப் பெட்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மு. ஆசியா மரியம் தலைமை வகித்தார். விழாவில் அமைச்சர் மேலும் பேசியது : நாகை மாவட்டத்தில் 457 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 1.21 லட்சம் பேருக்கு அரசின் விலையில்லா கணித உபகரணப் பெட்டிகள் வழங்கப்படவுள்ளன. இப்பணி, ஜன. 21-ம் தேதிக்குள் முடிவடையும்.மாணவ, மாணவிகள் ஆசிரியர் மற்றும் பெற்றோரின் அறிவுரைகளைப் பின்பற்றி, நற்பண்புகளை வளர்த்துக் கொண்டு, கல்வியில் சிறந்து விளங்கி, வாழ்வில் உன்னத நிலையை அடைய வேண்டும். இதற்கு, ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார் அமைச்சர்.இதைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கணித உபகரணப் பெட்டிகளை அமைச்சர் வழங்கினார். வேதாரண்யம் எம்எல்ஏ என்.வி. காமராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் .கே. சந்திரசேகரன், வருவாய்க் கோட்டாட்சியர் வே. மணிகண்டன், முதன்மைக் கல்வி அலுவலர் மா. ராமகிருஷ்ணன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment