Tuesday, 22 January 2013

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் 24 முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.



                               பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வர்களாக எழுத விரும்புவோர் வியாழக்கிழமை (ஜனவரி 24) முதல் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலமாக தனித்தேர்வர்கள்
விண்ணப்பிக்கலாம்.பிப்ரவரி 2-ஆம் தேதி வரை அவர்கள் விண்ணப்பிக்கலாம். நேரடித் தனித்தேர்வர்கள், ஏற்கெனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் ஆகியோர் தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.125 ஆகும். கோர் பாங்கிங் வசதியுடைய பாரத ஸ்டேட் வங்கியில் கட்டணத்தைச் செலுத்துதல் வேண்டும். வங்கியில் தேர்வுக் கட்டணத்தை பிப்ரவரி 4-ஆம் தேதிக்குள் கட்ட வேண்டும். இதற்கான சலானை விண்ணப்பத்துடன் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தல்: ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தவுடன், அந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தேர்வரின் புகைப்படத்தை ஒட்ட வேண்டும். அதில் அவர் இறுதியாகப் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியரிடமோ, அருகில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரிடமோ சான்றொப்பம் பெற வேண்டும்.தேர்வுக் கட்டணம் செலுத்திய சீட்டு உள்ளிட்ட இணைப்புகளுடன் பிப்ரவரி 4-ஆம் தேதி மாலை 5.45-க்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment