Sunday 13 January 2013

33 ஆயிரம் சிறுவர்கள் மீது 2011ம் ஆண்டில் வழக்குப்பதிவு



        இந்தியாவில் கடந்த 2011ம் ஆண்டில் மட்டும் சுமார் 33 ஆயிரம் சிறுவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், சிறார்கள், பல்வேறு குற்றச் செயல்களில்
ஈடுபடுவது, சமீபகாலமாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும், 2011ல், மட்டும், 16லிருந்து, 18 வயதுக்குட்பட்ட, 33 ஆயிரம் சிறார்கள் மீது, குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனஇவற்றில் பெரும்பாலானவை, கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்குகள். அதிகபட்சமாக, 1,419, பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனமகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தான், சிறார்கள் மீது, அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment