Sunday 6 January 2013

52 தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் களாக பதவி உயர்வு



               தமிழகம் முழுவதும் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 52 பேருக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இவர்கள் அனைவரும்  நாளை (திங்கள்கிழமை) தங்களுக்கான பணியிடங்களில் சேர
வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் தமிழகம் முழுவதும் 75 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதனால், கல்விப் பணிகள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.இதையடுத்து, புதிய மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான பட்டியலுக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது. இந்தப் பட்டியல் சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்டது.இதில் 12 இடங்கள் நேரடி நியமனத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மீதமுள்ள 11 காலியிடங்கள் குறித்து எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வில் தங்களுக்கு கூடுதல் பணியிடங்களை ஒதுக்க வேண்டும் என்று கோரி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment